Thursday, August 17, 2017

பெண்களுடன் இருப்பவன்




அன்புள்ள ஜெ

உத்தரனின் குணச்சித்திரம் நமக்கு மிகமிகப்பழக்கமானது. டம்பம் பேசுபவன். பெண்களுடன் இருப்பவன். அதே குணச்சித்திரம்தான். ஆனால் அது மிகையாக ஆகாமல் மிகச்சரியாக வெளிப்படுகிறது. அவனுடைய அப்பாவித்தனமும் பாவனைகளும். கூடவே ஏன் அவன் பெண்களுடன் இருக்கிறான் என்ற கேள்விக்கான விடை சுபாஷிணியின் மறுமொழியில் தெரிந்தது. அவள் அவன் மேல் கனிவுகொள்கிறாள். திறமையில்லாதவன் ஆனாலும் பெண்கள் அவனை வெறுப்பதில்லை

சண்முகம்