அர்ஜுனனிடம் இருக்கும் பெண்மை எப்படி வந்தது என்று இன்று எதையும் அறியாமல் நுட்பமாக உணர்ந்து முக்தன் சொல்லும் இடம் அற்புதமானது. ’அவரிடம் இவர் கொள்ளும் காதலே இவரில் பெண்மையென வெளிப்படுகிறது.’ என்கிறான்
எங்கோ எவருக்கோ மனதின் ஆழத்தில் அவன் நாயகி பாவம் கொண்டிருக்கிறான். ஆகவேதான் பெண்ணாக ஆக முடிகிறது. அது மிகநுட்பமானது. முதல்கோபிகை அர்ஜுனன் தான் என்று பாகவத மரபிலே சொல்வார்கள். அந்தளவுக்கு ஜீவாத்மா பரமாத்மாவை அணுகுவதுபோல கண்ணனை அணுகவேண்டுமென்றால் நாயகிபாவம்தேவை
ராகவன்