அன்பின் ஜெ,
வணக்கம்.
வேடம்
கலைத்து விராடரிடம் உரையாடுகையில் தருமர் விடுக்கும் வேண்டுகோள்,
திருதிராஷ்டருக்கும் விப்ரருக்குமான நெருக்கத்தை நினைவுபடுத்துகிறது.
(அங்குசமாய்
அருகில் இருந்து அனைத்தையும் கட்டுப்படுத்திய விப்ரர்,திருதிராஷ்டரின்
அளவுகடந்த சினம் தன்மீது வெளிப்படும்போதெல்லாம் அமைதியாக ஏற்றுக்கொள்வார்).
தருமனாய்
தன்னை வெளிப்படுத்திக்கொள்ள தருணம் அமைந்துவிட்டபோதும், குங்கனாய் பனையோலை
விசிறியால் அடிபடுவதை மனமுவந்தே ஏற்றுக்கொள்கிறார்.
பிறப்பிலேயே அகம் முதிர்ந்தவளாக, சிறுமித்தன்மையே இல்லாதவளாக, இயல்பிலேயே சக்கரவர்த்தினியாக பாஞ்சாலியை படைத்தேன்.
"பிரயாகையில் பாஞ்சாலி ஏன் திருஷ்டத்யும்னனுக்கு மூத்தவளாக காட்டப்படுகிறாள்?" என்ற கேள்வியொன்றிற்க்கு உங்கள் பதிலின்
ஒரு பகுதி.
தருமரும்
அவ்வண்ணமே. மழலைப்பிராயமோ, பாலகப்பருவமோ கொண்ட தருமரை நாம் வெண்முரசில்
கண்டதில்லை. நெறிநூல் கற்ற,அரச முறைமை சொற்களே எப்போதும்
வெளிப்படும்.
நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.