அன்புள்ள ஜெமோ
புஷ்கரனை அந்த கரிய புரவி ஏற்றுக்கொள்ளாதது ஒரு குறியீடு என்றுதான் எனக்குப்பட்டது. எனக்கு உடனடியாக ஞாபகம் வந்தது ம்யூனிச் ஒலிம்பிக்ஸில் கருப்பர்கள் மெடல் வாங்கி இட்லரை கொந்தளிக்கவைத்தது. இட்லரால் அதை தாங்கவே முடியவில்லை. அவருடைய அத்தனை கொள்கைகளையும் அந்த நிகழ்ச்சி கண்கூடாக அழித்துவிட்டது. அவர் உண்மையில் அங்கே தோற்க ஆரம்பித்துவிட்டார். அந்த கரியகுதிரைகள் அவருக்கு உண்மையை காட்டிக்கொடுத்துவிட்டன
ராஜசேகர்