அன்புள்ள ஜெ
வெண்முரசு பகுதிகளின்
அழகு என்பது அதிலுள்ள உருவகங்களின் மெடஃபிஸிக்கலான அம்சம்தான் என்று தோன்றுவதுண்டு.
ஒரு விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்ததும் அதை அப்படியே நீட்டி நீட்டி ஒரு பெரிய மெட்டஃபர்
ஆக ஆக்கிவிடுகிறீர்கள். அந்த அத்தியாயத்தின் அடிப்படையான கவிதையாக அதுதான் இருக்கின்றது.
அந்த அழகுதான் அந்த அத்தியாயத்தில் நேரடியாகச் சொல்லப்படுவதைவிட அதிகமாகச் சொல்கிறது
நான் இப்போதுதான்
பன்னிருபடைக்களம் வாசிக்கிறேன். சிசுபாலவதம். அதில் இருவருமே சக்கரம் வைத்திருக்கிறார்கள்
இரு சக்கரங்களும் உருமாறிவிடுகின்றன.சிசுபாலனின் சக்கரம் அவனுடனேயே இருந்துகொண்டிருக்கிறது.
அவனைக்கொல்கிறது. இந்த உருவகத்தை புரிந்துகொண்டால் மட்டும்தான் அந்த அத்தியாயத்தையே
புரிந்துகொள்ளமுடியும்
சாமிநாதன்