ஜெ
இன்று இந்திரனின் சிலை ஒரு கரியு இறகு காற்றில் விழுந்ததுபோல மண்ணில் விழுந்தது என்ற காட்சிவர்ணனையை ஒரு கனவுபோல பார்த்தேன். தொலைவிலிருந்து பார்க்கும்போது பெரிய சரிவுகள் அப்படித்தான் தெரிகின்றன. ஸ்டாலின் சிலையை ருஷ்யாவில் தள்ளிவிட்ட காட்சி ஞாபகம் வருகிறது. ஆனால் இதை நான் குறியீடாகவும் பார்த்தேன். எத்தனை பெரிய சிலை என்றாலும் சரித்திரத்தில் அது இறகுபோல அத்தனை அற்பமானதும் எடையில்லாததும்தான்
ஜெயராமன்