Monday, August 28, 2017

யோகியின் இருக்கை





அன்புள்ள ஜெ

சுதீரன் ஒரு அரிய கதாபாத்திரம் வழக்கமாக இப்படி தானாகவே மின்னி எழுந்து வரும் கதாபாத்திரங்கள் அற்புதமானவையாக இருக்கும். அத்தகைய கதாபாத்திரம் அவன். ஆனால் அவனைவிடச் சிறந்த கதாபாத்திரம் அந்தக்கிழவர். இத்தனை கொடூரங்கள் நிகழும் நகரில்தான் அவர் குழந்தைமாதிரி கல்கண்டு தின்றுகொண்டு காக்காயைப் பார்த்துக்கொண்டு வாழ்கிறார். ஒருகாலத்தில் அறமெல்லாம் தெரிந்த பேரறிஞராக இருந்திருக்கிறார். அப்போது அதைச் சொல்வது அவரல்ல, அவருக்குள் எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த ப்ழைய அந்தணர்தான். அவருடைய அந்த சிரிப்பை காணமுடிகிறது. இந்தக்கொடூர உலகிலும் ஒரு துண்டு இனிப்பு போதும் என அவர் அமர்ந்திருப்பது ஒரு யோகியின் இருக்கை என நினைக்கிறேன்

மகேஷ்