அன்புள்ள ஆசானுக்கு ,
உலகின் மிக நீளமான நாவல்கள்
பட்டியலில்
உங்கள் வெண்முரசு நான் சில மாதங்களுக்கு முன் பார்க்கும் போது 3
ஆவது இடத்தில் இருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு கிராதம் வெளிவந்து
விட்டதால் சரி இப்போது எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்க்க
போனால் பட்டியலில் இருந்து வெண்முரசை நீக்கி இருந்தார்கள் . ஏன்
என்று பார்த்தால் " it's a multidynastic historical epic "
இதை ஒரு நாவலாக எடுத்து கொள்ள முடியாது என்ற எழுதி இருந்தது. சரி
நான் எதற்கும் ஒரு விளக்க கடிதம் கேட்டு எழுதி இருந்தேன். அது
வந்த உடன் உங்களுக்கு தெரிவிக்கலாம் என்று இருந்தேன் அது வரவே
இல்லை சரி இன்று அந்த பதிவில் சென்று பார்த்தால் மீண்டும்
வெண்முரசை பட்டியலில் 4 ஆம் இடத்தில் சேர்த்து இருந்தார்கள். இதை பற்றி
உங்களுக்கு தெரியுமா? .
அன்புடன் ,
பா.சுகதேவ்.
மேட்டூர்.