அன்பின் ஜெ,
வணக்கம்.
"மெல்லிய உதை" மனதிலிட்ட மின்னதிர்வு இன்னும் முற்றகலவில்லை.
காவல்மாடத்தில் நாள்தோரும் உழலும் சடங்கிலிருந்து முக்தனுக்கு விடுதலையே.
ஜீமுதனின் நிறைவு வேறுவகை.
சிறந்த மற்ப்போர்வீரனாக வெளிப்படுத்திகொண்ட கணம் முதல் தன் இறப்பு குறித்து முற்றறிந்தவன்.
மற்ப்போரில் கைகோர்க்கையில் தன் முடிவு நெருங்கிவிட்டதைக்கண்டு
துயர்கொள்கிறான், அது பீமசேனரால் நிகழவிருப்பதையெண்ணி பணிவுகொண்டு பின் உவகைகொள்கிறான்.
குழந்தையொன்றின் பஞ்சுக்கால்கள் படரும் உணர்வோடு கர்ணனின் அம்பை தன்நெஞ்சில் தாங்குகிறான் முக்தன்.
தாயிடம் தஞ்சமடையும் உணர்வோடு வலவன் கரம் சேர்கிறான் ஜீமுதன்.
முக்தனின் முக்தியும், ஜீமுதனின் ஜீவமுக்தியும் நீர்க்கோலத்தில் நிலைக்கப்போகும் இரு அழியாப்புள்ளிகள்..
நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.