Tuesday, January 2, 2018

பெண்கள்



அன்புள்ள ஜெ

ஒரு பெரிய நிகழ்வு அணுகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் சிறுத்துக்குறுகி அதை அஞ்சி ஒடுங்கி இருக்கிறார்கள். சிலர் அங்குமிங்கும் ஓடுகிறார்கள். அந்தப்பரிதாபத்தை நாவல் முழுக்க ஒவ்வொரு கோணத்திலாகக் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள். பெண்கள் ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் மாறுபட்டிருக்கிறது. தேவிகை பரிதாபமான அன்னையாக இருக்கிறாள். அச்சமும் தயக்கமும் கொண்டிருக்கிறாள். ஆனால் எப்பாடுபட்டேனும் போரை நிறுத்தவும் விரும்புகிறாள். ஆனால் அசலை உறுதியான தீ மாதிரியானபெண்ணாக இருக்கிறாள். பானுமதி அரசிக்குரிய தோரணையை விடாமலேயே இருக்கிறாள். இதுவரையில் வெண்முரசிலே வந்த பெண்களில் எனக்கு அசலையைத்தான் மிகவும் பிடித்திருக்கிறது. அவளுடைய அந்தக்கூர்மை திகைக்கவைக்கிறது


மனோகரன்