Monday, June 4, 2018

சாத்யகியின் கதாபாத்திரம்




ஜெ,

சாத்யகியின் கதாபாத்திரம் திடீரென்று தந்தையாக உருமாறியிருக்கிறது. அவனுக்கும் அவன் குடும்பத்திற்குமான உறவு சொல்லப்படவில்லை. அவனைப்பற்றிய எதுவுமே பெரிதாக வந்ததில்லை. இரு நாவல்களில் அவன் மற்றவர்களைப்பார்க்கும் கதாபாத்திரமாக வந்திருக்கிறான். அதன் வழியாக அவனுடைய குணச்சித்திரம் நமக்குத்தெரிகிறது. ஆனால் தந்தையாக ஆகும்போதுகூட அந்த குணாதிசயம் சரியாகவே இருக்கிறது. சாத்யகி ஒரு அடிமை. தானாகவே அடிமையாக ஆனவன். எவ்வளவுபெரிய மாஸ்டருக்கு அடிமையானாலும் அடிமைதான். அப்படி ஒரு அடிமையாக ஆனவர்கள் சுயமாக முடிவெடுக்கமாட்டார்கள். ஆகவே எப்போதும் பதற்றம் கொண்டிருப்பார்கள். மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதைப்பற்றித்தான் கவலைகொண்டிருப்பார்கள். பெரும்பாலான அரசாங்க ஊழியர்கள் இப்படித்தான். அவர்கள் அலுவலகத்தில் அடிமைகள். வீட்டில் இதேபோல பிள்ளைகளைக் கட்டுப்படுத்த பதற்றப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். என் அப்பா இப்படித்தான் இருந்தார்

எஸ்.ஸ்ரீனிவாசன்