Wednesday, August 7, 2019

சிறியன சிந்தியாதான்



அன்புள்ள ஜெ,

சிறியன சிந்தியாதான் எழுதுகையில் நினைத்திருக்கவில்லை இவ்விறப்பு இத்தனை வலிக்குமென்று.நண்பர்கள் கிண்டலிலும் மென்னகையோடு கடந்தே வந்திருந்தேன். ஆயினும் தீயின் எடை துவங்கிய போதே மனம் அல்லாடத் துவங்கிவிட்டது. ஒருபுறம் துவளல், அதன் மறு எல்லையில் இழுத்துக் கட்டப்பட்ட நாணென திமிறல். எவரோடும் சுமுகமாக பேசவில்லை, எளிதாக காயப்படுத்த இயன்றது. மறுபுறம் அபாரமான புதிய நட்புகளை பெறவும், சிக்கலான அலுவலக நடப்புகளையும் அனாயாசமாக தீர்த்து வைக்கவும் இயன்றது. அனைத்தும் இன்றைய புள்ளியை நோக்கியே நகர்ந்து கொண்டிருந்தன. உண்மையில் விளக்க இயலா வெறுமையை உணர்கிறேன். என்னில் ஒரு பகுதி ஒழுகிப் போனது போல. கர்ணனின் இறப்பு கூட என்னை இவ்வளவு படுத்தவில்லை. இருக்கட்டும், இதுவும் கடந்து போகட்டும்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்.