ஜெ
ஒரு நினைவு எங்கே ஊடுருவி வருகிறது என்பது
மிகமிக முக்கியமானது. நகுலன் துரியோதனனும் பீமனும் இறுதியாகப் போர் புரிந்து கொண்டிருக்கும் காட்சியைக் காணும்போது துரியோதனனைப்பற்றி தன் மகன் சொன்னதை நினைவுகூர்கிறான்.
துரியோதனனின் கனிந்த கண்களைப்பற்றிச் சொல்லும் காட்சி.
அந்த இடத்தை வாசித்தபோது நான்
கண்கலங்கிவிட்டேன். அந்தபோர்க்கள காட்சியே அபாரமானது. அவர்கள் மூத்தவரே, இளையோனே என்று
அழைத்துக்கொள்கிறார்கள். அத்தனை பேரழிவுக்குப்பின் துரியோதனன் கொல்லப்பட்டாகவேண்டும்.
வேறு வழியில்லை. ஆனால் மெல்லமெல்ல ஒரு பெரிய பாறை உருண்டு அங்கே செல்லும் காட்சி போல
துரியோதனன் சாகும் காட்சி வருகிறது. துரியோதனன் என்ற அரசனோ வீரனோ அல்ல அங்கே வீழ்ந்தவன்
துரியோதனன் என்ற பெருந்தந்தை என்று வெண்முரசு அற்புதமாகக் குறிப்பிடுகிறது
எம்.எஸ்.ஆர்