Thursday, August 8, 2019

பொருளில்லாதவன்




அன்புள்ள ஜெ,
.
ஜல்பன் என்னும் வேடன் வந்ததுமே வெண்முரசின் வாசகர்களுக்கு அவன் யார் என்பது புரிந்திருக்கும். அவன் அத்தனை உச்சகணத்தில் அப்படி அறிமுகமாவது ஆச்சரியமான நிகழ்வுதான். அவனுடைய பெயர் ஜல்பன். ஜல்பனம் என்றால் உளறுதல், பிதற்றுதல். பொருளில்லாதவன். அவன் அப்படி வந்து யோகத்தைக் கலைக்கிறான். யோகத்தைக் கலைப்பதற்காகவே அவன் அப்படி காட்டிலிருந்து உருவாகி வந்திருக்கிறான். அந்தக்காடு அவரவர் மனசுக்குள் இருப்பதுதானே? காமத்தையும் யோகத்தையும் கலைப்பது மகாபாரதத்தின் ரிக்கரிங் தீம். இங்கே அதற்கென்றே ஒரு கதாபாத்திரம். வஜ்ரயோகினிதேவி கிருஷ்ணனிடம் அவனுடைய இறுதியோகமும் கலைக்கப்படும் என்று சாபம் கொடுக்கிறாள். அந்த இறுதியோகம் ஒரு ஜல்பனத்தால் கலைக்கப்படுகிறது. மாபெரும் அர்த்தங்களை உருவாக்கியவன் எந்த அர்த்தமும் இல்லாமல் மறைகிறான். அந்த குறிப்பு வந்ததும் தெளிவாகிவிட்டது

சாரங்கன்