ஜெ சார்,
வெண்முரசில் பூரிசிரவஸின் முக்கியத்துவம் என்ன என்று சிந்திக்கும்தோறும் ஆச்சரியமாக இருக்கிறது. அவனுக்கு என்று ஒரு பெரிய தகுதியும் இல்லை. பெரிய அரசில் பிறக்கவில்லை. குலம் இல்லை. பெரிய தகுதிகளும் இல்லை. சாதாரணமான ஒருவன்
அந்தச் சாதாரணமான ஒருவன் எப்படி அந்தச்சூழலில் லெஜெண்டுகள் நடுவே உணர்ந்தான் எப்படி வாழ்ந்தான் என்றுதான் கதை சுட்டிக்காட்டிச்செல்கிறது இல்லையா? அவனுடைய எளிமையை ஒவ்வொரு சந்தர்ப்பமும் காட்டுகிறது. என நினைக்கிறான் என்ன தேவைப்படுகிறது அவனுக்கு என்பதுகூட அவனுக்குத் தெளிவாக இல்லை
பரிதாபமாகவே இருக்கிறது. ஆனால் வாழ்க்கை இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரியவர்களுக்கு நடுவே சிறியவர்களும் அவர்களுடைய ஆசைகளுடனும் கனவுகளுடனும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதிலும் அவன் பாலைவனத்தைச் சேர்ந்தவன் கங்கைநீர் ஓடும் மண்ணிலே உள்ள வஞ்சம் ஒன்றுமே அவனுக்குப்புரியவில்லை
பூரிசிரவஸை நேரில் பார்த்தால் நீயும் நானும் ஒன்று என்று சொல்வேன் என நினைக்கிறேன்
குமரகுரு