ஜெ
இன்றைய அத்தியாயத்தின் அமைப்பும் கட்டுக்கோப்பும்ப்ரமிக்க வைத்தன. குந்தியும் சாத்யகியும் அஸ்தினபுரியில் வந்து இறங்கும்போது டிராஃபிக்ஜாம். இளவரசிகள் வந்து இறங்கிக்கொண்டே இருக்கிறார்கல். அந்த இளவரசிகளின் அவரவைப்பற்றி இரண்டு பாடபேதங்கள்
சூதர் வழக்கமான பொன்னும் மணியும் பொழியும் கதையைச் சொல்கிறார். அதன்பின் அவர் சிரித்தபடி பணம்கேட்பது தனி அழகு. அதன்பின் விறலி பாடும்கதையே வேறு
அவளுடிஅய பாட்டில் எல்லா பெண்களும் கோலம்போடும்போது புஷ்பக விமானத்தையும் தேரையும்தான் வரைகிறார்கள். ஆனால் அவை எங்கேயும் போவதே இல்லை. அந்தக்கோடுகளின் சிடுக்கு அவர்களின் மனசின் ஆழம்
அந்த வண்டு சம்படையின் ஆன்மா. அது பறந்துகொண்டே இருக்கிறது. சன்னல்களில் திரைச்சீலைகள் ஆடுகின்றன. அந்த வண்டு பறந்துபறந்து எங்கே உட்காரப்போகிறது? யாருடைய தலையிலே? அடுத்த சம்படை யார்?
கடைசியில் இரு இளவரசிகளைக் காட்டி குறிப்பாலுணர்த்திவிடுகிறீர்க்ள். அந்த இளவரசிகளின் உற்சாகமான பேச்சையும் துள்ளலையும் நினைக்கையில் வயிற்றை என்னமோ செய்தது
சிவசங்கர்