நோயில்
படுத்திருந்தபோது இருந்த உளநிலைகளும் எழுந்தமரும்போது உருவாகும்
உளநிலைகளும் முற்றிலும் வேறானவை என்று துரியோதனன் அறிந்துகொண்ட நாட்கள்
அவை.
ஆனால் உள்புண் சற்று ஆறி எழுந்தமர்ந்ததுமே அனைத்தும் மாறிவிட்டன.
மிக நுட்பமான மனநிலை சார்ந்த இந்த இயல்பு மனிதன் தோன்றிய நாள் முதலாக அவனுள் வேரூன்றி இருப்பதாகவே படுகிறது. ஆரோக்கியத்துடன் இருக்கும்போது ஒவ்வொரு மனிதனின் ஆணவமும் அகங்காரமும் கொண்ட பேச்சுக்களும் நடவடிக்கைகளும், படுக்கையில் விழுந்தவுடன் மாறுவதுதான் காலம் அவனுக்கு போதிக்கும் பாடம். இருப்பினும், மீண்டும் எழுந்தவுடன், வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைதான் இல்லையா. படித்த பாடத்தால் மனம் மலர்பவர்கள் மிகச்சிலரே அல்லவா.
கணபதி கண்ணன்