அன்புள்ள ஜெ..
நலமா?
பூரிசிரவஸ்
பற்றி பல பதிவுகள் வந்து விட்டன. Bhurisravas - என்று ரஞ்சனி சொல்கிறாள் -
முழுமையாக கேட்டுக் கொள்பவன் என பொருளாம். அழகு, மென்மை மற்றும் மெதுவாக
அரசு சூழ்தலில் முக்கிய பங்கேற்பு என பயிர் போல வளரும் பாத்திரம். மிக
முக்கியமாக பெண்களிடம் காட்டும் அதி மென்மை - பலரைக் காதலித்து, ஒருவரையும்
மணம் புரியாமல் இருந்து விடுவாரோ - என நினைத்து - ஒரு fast forward
செய்து அவர் இருக்கும் போர்க் காட்சி - (வியாசர் விருந்தில்தான்)
வாசித்தேன் -
மனம் சோகமாகி விட்டது . உள் வாங்கிக் கொள்வது எளிதல்ல. சாத்யகியும் பூரிசிரவஸ்ஸும் - தொட்டணைத்து ஊரும் அறிவு வளக்கிறார்கள்,
கிருஷ்ணனும் பலராமனும் வெகு சுவாரசியமாக இருந்தது. பலராமன் துரியோதனுக்கு மனமொக்க வாதிடுவது ஒரு அழகு.
கிருஷ்ணன் சகுனி நாற்களம் - நல்ல நாடகமாகலாம்.
கிருஷ்ணனோ ஓடும் நதி அல்லது ஓடை போல - எல்லாவற்றையும் தன்னிடம் ஈர்த்து - தன் வேலையை வேறொரு கதியில் செய்வது போல -
உறவு மற்றும் உரையாடல்களின் ஆழம் - மீண்டும் பல வாசிப்பிற்கு கூடும். சமீபத்திய துரியோதனன் பானுமதி உட்பட.
ஒவ்வொரு பாகத்திலும் ஒரு ஆச்சரியம் கட்டாயம் உண்டு. இதில் பூரிசிரவஸ், சாத்யகி,
சிறுவயதில் கதை கேட்க (நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ) - அயோத்திய கல்யாண மண்டபத்தில் - என் பாட்டியுடன் செல்வேன்.
இப்போதும் அந்த எதிர் பார்ப்புடன் இணையம் விழையும் என் மனம் - உங்கள் கதை கேட்க.
அன்புடன் முரளி