Sunday, April 19, 2015

வெண்முரசின் தரிசனங்கள்




வெண்முரசு நாவல்களில் வரும் சிறு சிறு விஷயங்களை, கதாப்பாத்திரங்களை, குறியீடுகளை விவாதிக்கிறோம். ஆனால் வெண்முரசு நாவல்களில் நாம் பெறும் தரிசனம் என்னவென்று எந்த அளவுக்கு விவாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு வாசகனாக இதுவரை படித்த ஒவ்வொரு  நாவலின் தரிசனத்தை எழுதி அதை செறித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். பிரயாகை வரை படித்துள்ளேன். அவற்றின் தரிசனத்தை எடுக்க முடிகிறதா என்று முயல்கிறேன்.

முதற்கணல்:

படித்து ஒரு வருடமிருக்கும். இந்த நிலையில் முக்கியமாக ஞாபகம் வரும் குறியீடுகள் வியாசர் இருப்பிடத்தில் நடக்கும் விலங்குகளில் வேட்டை. பசுவை அடித்து உண்ணும் சிங்கம். அந்த சிங்கத்தை பிறகு கொண்று உண்ணும் கழுதை புலிகள். இந்த குறியீட்டின் ஒரு வடிவாகத்தான் பீஷ்மரும், அவரின் வலிமையும், அம்பை சகோதரிகளை கடத்திவருவதும் நாவலில் வருகிறது. அதனால் இதையை அந்த நாவலின் தரிசனமாய் கருதுகிறேன். வலியது எளியதை உண்டு வாழும். அந்த வலியது நாளை எளியதாய் ஆகும் போது. அதைவிட வலியது அதை உண்டு வாழும். இதுவே இயற்கையின் நியதி. 

மழைப்பாடல்:

இதில் இதன் கடைசி அத்தியாய காட்சி தான் ஞாபகம் வருகிறது. சத்யவதி, அம்பிகா, அம்பாலிகை மூவரும் காடேகுவது. சத்யவதி - பெரும் கணவு, வல்லமை கொண்ட பெண்- கிட்டத்தட்ட பாரதவர்ஷத்தின் மகாரானி, அம்பிகையும் அம்பாலிகையும் வாழ்வில் பாதியை அவர்களின் மைந்தர்களுக்ககாக பகையில் கழித்தவர்கள். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் பகை, ஆசை, ஆட்சி அனைத்தையும் துறந்து எளியவர்களாய் வணம் புகுகிறார்கள். அந்த தருணத்திலிருந்து அவர்களும் காட்டு விலங்குகள் தான். மனிதனின் சிறுமையை அவனின் சிறு எல்லையை காட்டுகிறது. நாம் கானும் கணவுகள், நமது அகங்காரம் எல்லாம் ஒரு மயக்கம். அந்த மயக்கம் ஒரு தருணத்தில் கலையும் போது இந்த உலகின் முன் நாம் ஒரு சிறிய ஜிவன்.

மற்ற நாவல்களை பற்றி பிறகு எழுதவேண்டும். மற்றவர்களின் எண்ணங்களை அறிய விவாதிக்க விழைகிறேன்.

ஹரீஷ்

குழும விவாதத்தில்