நாம் அன்றாட வாழ்க்கையிலே
காணும் சிலவிஷயங்களை மகாபாரதத்திலே மேலும் கூர்மையாகப் பார்க்க நேர்வது ஒரு அற்புதமான
அனுபவம். பெரும்பாலான பிறவிக்குணங்கள் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்.
துரியோதனனுக்கும் திருதராஸ்டிரனுக்கும் இடையே அம்மாதிரியான உறவு இருப்பது தெரிகிறது.
அது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆனால் புரிந்துகொள்ளவும் முடியக்கூடதாக இருக்கிறது
திருதராஸ்டிரன்
பெரிந்தன்மை உள்ள மனிதராக இருக்கிறார். கைகளை விரித்து அணைத்துக்கொள்ளக்கூடியவர். கர்ணனைப்
பார்த்ததுமே அவர் நெஞ்சிலே தூக்கி வைத்துக்கொள்கிறார். அதே குணம் துரியோதனனிடமும் இருக்கிறது.
அவன் பூரிசிரவஸுக்கு இடம் கொடுப்பது மிகவும் இயல்பாகவும் அழகாகவும் இருக்கிறது. அது
நெஞ்சிலே உள்ள இடம். கர்ணன் அப்போது அவனைக் கண்டிப்பதும்கூட இயல்பான அன்பையே காட்டுகிறது
துரியோதனன் அவன்
அப்பாவிடமிருந்து பெருந்தன்மையையும் நட்பையும் பெற்றிருக்கிறான். பானுமதியை அடைந்தப்பிண்னர்
அவனுடைய நல்ல பண்புநலன்கள் எல்லாம் வெளியே வந்து அற்புதமான மனிதனாக ஆகிவிடுகிறான்.
அந்த மாற்றம் மனசை நெகிழச்செய்கிறது. துரியோதனன் எவ்வளவு பெரிய மனிதன். சக்கரவர்த்தி.
அவனை சாமியகக் கும்பிடுகிறர்கள் பாரதவர்ஷத்தின் ராஜாக்கள் எல்லாம் அவனுடன் தான் இருந்தார்கள்.
இதெல்லாம் நம்மால் மறந்துவிடுகிறது. அதை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிகிறது
குமார் சண்முகநாதன்