ஜெ
பூரிசிரவஸ் பெண்களை பார்க்கும் அந்த அத்தியாயத்தை பலமுறை நினைத்துக்கொண்டே இருந்தேன்
அதன் அமைப்பே ஆச்சரியமானது. cosmic music ல் இருந்து தொடங்குகிறது. அதிலே மெய்மறந்து கிடக்கிறார்கள் பெண்கள்
அப்படியே சிறிய பேச்சுகளுக்கு வருகிறது. அதுவரை இசை முழக்கிக்கொண்டிருந்தவனே சல்லித்தனமாகப் பேசுகிறான். சில்லறை உணர்ச்சிகளெல்லாம் வருகின்றன.
மெதுவாக அடுத்தகட்டம் போய் பானுமதி அந்த உணர்ச்சிகளை எல்லாம் மனுஷ வர்க்கத்தின் உணர்ச்சிகளாக பெரியதாக காட்டுகிறாள். மீண்டும் எல்லாம் cosmic ஆக மாறுகின்றன
மீண்டும் இசை
சண்முகம்