ஜெ
இத்தனை பெண்கள் வரும்போது எப்படி நீங்கள் முழுமையாக வேறுபட்ட அடையாளங்களை உண்டுபண்ணுகிறீர்கள் என்பது ஆச்சரியமானதுதான். நாங்கள் குணச்சித்திரங்களை ஞாபகம் வைத்திருப்பது அதைவிடவும் கஷ்டமானது. நான் ஒவ்வொரு பெண்ணையும் ஒவ்வொரு முகமாக நினைத்துக்கொள்கிறேன். தேவிகை ஒரு பாகிஸ்தான் பெண்போல. விஜயை ஒரு நேபாளி பெண் போல. துச்சளை நம்மூர் திராவிடப்பெண் போல. திரௌபதியும் நம்மூர் பெண்.
ஆனால் பானுமதி ஒரு மங்களூரியன் பெண். சுருண்ட தலையும் பொசுபொசுவென்ற உடலும் வெள்ளைநிறமான உடலும் கொண்டவள். இந்த வேறுபாடு உதவிகரமானதாக இருக்கிறது. இனிமேலும் அரசிகள் வந்துகொண்டே இருப்பார்கள் இல்லையா
ஒவ்வொருவருக்கும் குணாதிசயவேறுபாடும் உள்ளது. துச்சளை துரியோதனன் திருதராஷ்டிரன் ஆகிய இருவரிடமும் உள்ள பெருந்தன்மையை மட்டுமே கொண்டவளாக இருக்கிறாள். பானுமதி அரசி. ஆனால் பாஞ்சலிக்கு இருக்கும் செருக்கு கொஞ்சம் கூட இல்லாமலிருக்கிறாள்
ஜெயராமன்