Thursday, April 23, 2015

குளிர்ந்தவள்



ஜெ

இதுவரை வந்த அத்தனை இளவரசிகளிலும் பானுமதியின் கதாபாத்திரம்தான் அத்தனை அழகாகவும் நெகிழ்வாகவும் வந்திருக்கிறது. பானுமதி என்ற ஒரு பெயரைத்தான் அறிவோமே ஒழிய அவள் முகமோ அடையாளமோ தெரியாது. இந்தக்கதைகளிலே வரும் பானுமதியைப்பார்க்கும்போது மனம் முழும்ம ஒரு அமைதி

குளுமையாக அழகாக அமைதியாக இருக்கிற பெண். குடும்பத்தை ஆளக்கூடியவள். அரசியும்கூட. அந்தமாதிரியானப் பெண் அவள். ஆனால் அதை நீங்கள் எப்படி உருவகித்திர்கள் என்று சொல்லமுடிகிறது.  நூறு தம்பியர் உள்ள ஒருவனின் மனைவியாக வருபவள் அம்மா மாதிரித்தானே இருக்கமுடியும்?

மகாபாரதம் துரியனை ஒரு மிகச்சிறந்த ஆட்சியாளனாகத்தான் சொல்கிறது. அவனுக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்தமனைவி. நூறு தம்பியரையும் ஒன்றாக நிறுத்தியவள். அவள்தான் பானுமதி. அவள் இப்படித்தான் இருக்கமுடியும்

அவளுக்கு லட்சுமியின் மோதிரத்தை பாஞ்சாலி கொடுத்தனுப்பியதும் அழகான இடம்

லட்சுமிநாராயணன்