Tuesday, March 1, 2016

காண்டவ அழிப்பு





ஜெ

காண்டவ அழிப்பு என்பது மகாபாரதத்துக்கு முன்னால் நடந்த ஒரு பெரிய போர் என்பதும், அது நாகர்களின் கடைசி இனக்குழு அழிக்கப்பட்ட நிகழ்வு என்பதும், அந்த வஞ்சம் மகாபாரதப்போருக்கான விதையாக ஆனது என்பதும் ஆச்சரியமான வெளிப்படுத்தல்களாக உள்ளன. நான் மகாபாரதக்கதையை பலமுறை கேட்டிருந்தாலும் இப்படி யோசித்ததில்லை. இப்படி யோசித்தபிற்பாடு வேறு எதுவும் சரி என்று தோன்றவுமில்லை

கர்ணன் ஏன் அத்தனை வஞ்சம் கொண்டவன் ஆனான்? அவன் அம்பிலிருந்த நாக நஞ்சுக்கு என்ன அர்த்தம்? அற்புதமான ஒரு விளக்கம். நாகர்களின் தெய்வமாக கர்ணன் ஆனான் என்பதனால்தான் நம் கோயில்களில் எல்லாம் கர்ணன் நாகத்தை கையில் வைத்துக்கொண்டு நின்றிருக்கிறானா?

ஜெயராமன்