ஆசிரியக்கொடை கோரியபோது என் கைகளைப் பற்றி நெரித்துக்கொண்டிருந்த கைகளில், கலங்கி வழிந்த விழிகளில் நான் கண்டது பேதைமையையே ஆற்றலாகக் கொண்ட அன்னை ஒருத்தியைத்தான்"
தாய்மை என்னும் தளை...மனிதனாகி இப்புவியில் பிறந்த யாருக்கும் அதுவே நஞ்சு.
இங்கு ஒருவருக்கொருவர் அதை உணர்த்திக்கொள்கிறார்கள். வேதமோதும் முனிவர் அதை கடக்க முடிவதில்லை. கொற்றவை
வடிவானவளும் தன் வயிற்றுக்குருதியின் நிலை நினைக்கும்போதுதான்
விதிர்க்கிறாள். வேதாந்தம் காணும் மனிதனாகி வந்த பரம்பொருளும் கூட தன்
குலத்தின் ஊழை நினைக்கும்போது அன்னையாக கலங்குகிறான். (நாளை இன்னொரு
பேரன்னையிடமும் அதே சொல்லைப் பெறுவான்).
மண்ணில் பிறந்து வந்த மனிதரை கட்டுவது அறம். அது அன்னை என்னும் வடிவம் தன் மைந்தரை காக்கும் பொருட்டு தான் உருவாக்கிக் கொண்டது.
மதுசூதன் சம்பத்