ஜெ
சட் சட்டென்று வந்துவிழும் வரிகள்தான் வெண்முரசின் பலம். அது யோசித்து வருவதில்லை. இது ஒரு பெரிய படைப்பானதனால் நீங்கள் அதிலேயே இருக்கிறீர்கள். இயல்பாக அது வந்து விழுந்துவிடுகிறது
விடுதலை அடைந்தவன் எப்படி இருப்பான்?
அறிவழிந்து அறிவென அமைந்திருப்பான்
என்னும் வரி ஓர் உதாரணம். நம் மரபில் பலரால் பலவகையிலே சொல்லப்பட்டுவிட்ட ஒன்றுதான் இது. தான் என்னும் அறிவு அழிந்து அறிவேயாக நிறைந்துள்ல பிரம்மத்தில் கரைந்து அமர்ந்திருப்பான். ரமணரே அதைப்பாடியிருக்கிறார். ஆனால் ஒரு நாவலில் அப்படி ஒருவரி தெறிக்கும்போது ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது
சாரதா