Wednesday, August 17, 2016

வருணனைகள்



சார் ,

விதுரர் ஆயிரத்தவனை கழுவில் ஏற்றிய மனநிலை பார்த்து கொஞ்சம் அரண்டுவிட்டேன் :)

உங்களின் புனைவுகளின் முக்கியமான கவர்ச்சியே வருணனைகள்தான் , கூழாங்கற்கள் கண்களாக , அடர்த்தியான காடுவழியே செல்வது ஆடையின் உள் செல்லும் ஊசியாக , ஒளி ஊடுருவது கண்ணாடி குழாயாக , முரசறைவது யானை பிளிறலாக .....
இவை கொடுக்கும் கற்பனைகள் அலாதியானவை .

கீழிருக்கும் இரு சொற்றொடர்களில் முதலில் இருப்பதை செயல்படுவதற்கு பின்னும் , பின்னிருப்பதை செயல்படுவதற்கு முன்னும் எனக்கானதாக பொருத்திக்கொள்ளலாம் என இருக்கிறேன் :)



ஒரு சிறு இறகு காற்றில் பறந்தலைவதை காணுங்கள். அது தேரும் திசையும் சென்றமரும் இடமும் முடிவிலா விசும்பால் முடிவுசெய்யப்படுபவை என்று அறிவீர்களா? //



சிறிய இறகிதழை மெல்ல ஏந்தி அது விழைந்த திசைக்கு கொண்டுசெல்லும் அதே மென்காற்றுதான் அதுவும்”

ராதாகிருஷ்ணன்