ஜெ
இன்றைய
அத்தியாயத்தின் முக்கியமான பகுதியே இலக்கியம் –தத்துவம் இரண்டுக்குமான முரண்பாடுதான்.
நான் வேதங்களின் கிருஷ்ண- சுக்ல சாகைகளின் வேறுபாடுகளைப்பற்றி பலர் எழுதியதை வாசித்திருக்கிறேன்.
கிருஷ்ண சாகை என்பது இலக்கியமானது, ஆகவே அது சற்று சுதந்திரமானது, ஆகவே கறாரானது அல்ல
என்று இப்போதுதான் தெரிந்தது. அது சரியான விளக்கமாகவும் இருக்கிறது.
தத்துவமென
மாறாத இலக்கியம் வெறும் களியாட்டு மட்டுமே
என்ற
வரி தத்துவவாதி சொல்வது. விரிவதன் மூலம் அறிவது ஒரு மார்க்கம்தான் என அவர்கள் ஒப்புக்கொள்வதே
இல்லை.
ஜெயராமன்