ஜெ
அர்த்தமின்மையைத்தான்
எல்லா உச்சகட்ட ஞானங்களும் சென்று அடைகின்றன. அர்த்தம் இருக்குமென்றால் அது நாம் உருவாக்கிக்கொள்ளும்
அர்த்தம்தான். அதைநோக்கிச் சென்று அதைக் கண்டடைந்ததனால் தான் யோகியர் அதன்மேல் அமர்ந்திருக்கிறார்கள்.
அதை எதிர்பாராமல் அர்த்ததை உருவாக்கீக்கொண்டே வாழ்ந்து கடைசியில் அதைக் கண்டுபிடிப்பதனால்தான்
குடும்பஸ்தர்கள் சோர்வடைந்து கடவுளை சரணடைகிறார்கள்
அர்த்தமின்மைமீது
உட்கார்ந்திருக்கும் யோகியை இருட்டில் யானைமேல் அமர்ந்திருப்பவன் என்று சொன்ன உவமை
ஒரு முக்கியமான வரி. அந்த யானையின் தந்தங்களைப்புன்னகை என்று சொன்னதும். எனக்கு கஜசம்காரமூர்த்தி
ஞாபகத்துக்கு வந்தது
சுவாமி