Friday, August 26, 2016

புராணத்தன்மை




ஜெ

சாந்தீபனி குருகுலத்தில் கிருஷ்ணன் கல்விகற்றதும் அவருக்கும் குருவுக்குமான உறவும் பாகவதத்தில் உள்ள கதைகள். அவற்றை பின்னர் மகாபாரதத்தில் சேர்த்துக்கொண்டார்கள். மிகமிக புராணத்தன்மை வாய்ந்த கதைகள். கிருஷ்ணன் தெய்வமாகையால் மட்டுமே அவற்றைச் செய்தான் என்று காட்டுபவை அவை

அவற்றை வைத்துக்கொண்டு இதைப்போன்ற தத்துவார்த்தமான நாவலில் நீங்கள் செய்யப்போவது என்ன என்று புரியவில்லை. அவன் வேதங்களை விளையாட்டெனக் கற்றதும் கல்வியை கடந்தசென்றதும் சரியாக இருக்கிறது. ஆனால் கிருஷ்னனைப்பற்றி பாகவதம் சொல்லும் கதைகள் எவையுமே மகாபாரதத்தின் historic sense க்கு கொஞ்சம் கூடப்பொருந்தாதவை


ராஜ் மாதவ்