நீலம் 30வது பகுதியில் அக்ரூரர், கிருஷ்ணனை காண்பது
விருந்தாவனத்தில் நீலக்கடம்பின் அடியில் குழலூதிக்கொண்டிருக்கும்போது..
சொல்வளர்க்காட்டில் இன்றைய பகுதியில், அக்ரூரர் உஜ்ஜயினியில்
சாந்தீபனி முனிவரின் குருகுலத்தில் காண்பதாக வருகிறது (கிருஷ்ணன்
வாயிலாக) அங்கிருந்தே மதுராவுக்கு கிளம்புவதாகவும் உள்ளது..ஏதும் திருத்தம்
தேவையா?
சுரேஷ் கோவை.
அன்புள்ள சுரேஷ்
ஆம் அதை நான்
முன்னரே பார்த்துவிட்டுத்தான் அப்படி அமைத்தேன். உண்மையிலேயே பாகவதக் கதையில் கிருஷ்னன்
எப்போது கம்சனைக்கொன்றான், கொன்றபின்னரா சாந்திபனிக்குச் சென்றான் என்பதெல்லாம் குழப்பங்கள்.
இங்கே அக்ரூரர்
அவனை கோகுலத்தில் இருந்து அழைத்துச்செல்கிறார். அதன்பின்னர் அவன் சிலநாள் அக்ரூரிடம்
பயின்றிருக்கலாம் . அதன்பின் அவன் தந்தை அவனை சாந்தீபனியில் சேர்க்கிறார். சாந்திபனியில்
அக்ரூரர் வந்து அவன் கடமையைச் சொல்கிறார். கம்சனைக்கொல்ல அழைத்துச்செல்கிறார் என வைத்துக்கொண்டேன்
கிருஷ்ணனை
ஒரு இளைஞனாக ராதை பார்ப்பதெல்லாம் அவள் கற்பனையே. அது நீலத்தில் உள்ளதுதான்
ஜெ