“ஒருவர்
தன் வாழ்நாளெல்லாம் எதை தன்னிடமிருந்தே மறைத்துவருகிறாரோ அதை அவரிடம் சுட்டும் சொற்கள். அவற்றை ஒருபோதும் நாம் சொல்லக்கூடாது. ஏனென்றால் கொல்லும் சொற்கள் எல்லாம் கொன்றபின் மேலும் குருதிப்பசி கொண்டு திரும்பிவருபவை’
என்ற தருமனின்
வரிகளை இன்றைய அத்தியாயத்தின் முழுமையாக கொள்கிறேன். ஒருவகையிலன்றி ஒருவகையில் அதை
வாழ்க்கையில் உணராதவர்கள் இருக்கமாட்டார்கள். இது அறிவுள்ளவர்களுக்கு இன்னும் அதிகம்.
அறிவுக்கூர்மைகொண்டவர்கள் பிறர் மனங்களை கூர்மையாகப்பார்க்கும் தன்மைகொண்டவர்கள். அதனால்
அவர்களால் பிறரை மிகக்கூர்மையாகப் புண்படுத்தவும் முடிகிறது என தோன்றுகிறது
ஜெயராமன்