ஜெ,
இன்றையவெண்முரசு
முக்கியமாக இரண்டு உருவகங்களை முன்னால் நிறுத்துகிறது. திசைக்கையன் ஆன அந்தச் சிலந்தி. ஒளியாலேயே தன்னை மறைத்துக்கொள்வது. அதை அந்த இடத்தில்
எப்படிப்பொருத்திக்கொள்வது என்ரே தெரியவில்லை. ஆனால் மிகமிக முக்கியமான ஒரு உருவகம்
அது
அதேபோல
அந்தக்குரங்கு. அது பாசத்தால் கட்டப்பட்டு தருமன் கூட வருகிறது . காட்டில் அதற்கு என்ன
இல்லை? ஏன் ஊருக்குள் வந்து மனிதன் மடியில் தூங்குகிறது? அதையும் சரியாக அந்தச்சந்தர்ப்பத்திலே
பொருத்த முடியவில்லை. ஆனாலும் அவை இரண்டுமே ஒரு வகையில் இந்த அத்த்தியாயத்தை வலுவாக
ஆக்குகின்றன
ஜெயராமன்