பல வருடம் பிரிந்திருந்த மைந்தனுக்காக தவிப்புடன் காத்திருக்கும் ஆசிரியரிடம் “உங்கள் மைந்தனுக்கும், மதுராவில் கொல்லப்பட்ட பல்லாயிரம் மைந்தர்களுக்கும் வேறுபாடு உள்ளதா” என இளைய யாதவர் கேட்டதை அறிந்ததும் கொஞம் நிம்மதியாக இருந்தது. என்ன சொன்னார் அப்படி அவர் வருடக்கணக்காக காத்திருந்த மகனைக்கூட காணாமல் வெளியேரும் அளவிற்கு என்று குடைந்துகொண்டே இருந்தது மனதில்
ஆசிரியரை பழித்தல் என்பது யாதவனின் ஆடலின் ஒரு பகுதியெனினும், கண்னன் கலங்கும் ஒரு தவறாக இதுதான் நான் முதல் முதலில் காண்கிறேன். என்ன சிரித்தாலும் ஆசிரியரைப்பழித்தது அவனுக்கும் மாறா வலியளித்த ஒன்று. . குருதியில் குளித்தபோதும் கூட கலங்காதவன் ஆசிரியரை பழித்தற்கு அல்லவா வருந்துகிறான்? அதுதன் ஆசிரியம் என்பதின் மகத்துவம். சொல்லியபின்னும் அதிலிருந்து விடுபட முடியா அளவிற்கு அதன் பொறி வலியது என்றும் சொல்கிறான். அவன் ஆடல்தான் அவன் நடத்தியதுதான் ஆனலும் அவன் மிக வருந்தும் ஒரு பிழை இதுவே
சரியான இலக்கிற்கான சரியான அம்பு எனினும் தீச்சொலும் இடுகிறார். கொல்லும் சொற்கள் கொன்றபின் மேலும் குருதிப்பசி கொண்டு திரும்பிவருபவை.” அவர் தீச்சொலிடும் முன்பே இளையா யாதவன் நாகக்கண்கள் போலிருந்த அவரின் விழிகளைக்கண்டே உணர்ந்து விடுகிறான்
புரவியில் ஏறி அதை சவுக்கால் அடித்து விரையச்செய்து புழுதிபறக்க பாலைவெளியில் பாய்ந்து துவாரகை நோக்கி செல்லும் இளைய யாதவனின் மனநிலையில் வாசிக்கும் அனைவரும்மெ இருந்திருப்போம்
இன்றைய பகுதிக்கான படம் அருமை. காற்றில் நெளிவது போல குதிரையும் இளைய யாதவரின் பறக்கும் உடையும் புழுதியுமாக படிக்கையில் மனதில் என்ன காட்சி தெரிந்ததொ அது அப்படியே சித்திரமாக கண்டேன். அந்த பாலைச்சோலையின் கள்ளி வகை செடிகள் botanical details கூட மிக சரியாக இருக்கும் படியே வரையப்பட்டிருக்கிறது
லோகமாதேவி