ஜெ
இன்றையவெண்முரசில் சூதனின் நக்கல் அற்புதம். உண்மையில் இதை நானே நினைத்துக்கொண்டிருந்தேன். அனைவரும் பேசுவது ஒன்றையேதான் - ஆத்மாவே பிரம்மம், இதெல்லாமே பிரம்மாதான். ஆனால் அவர்களுக்குள் அப்படி என்ன வேறுபாடு? எவ்வளவு சண்டை?
தத்துவமே இப்படி கடைசியில் மிகச்சிறிய ஒரு இடத்தில் நடக்கும் பூசலாக ஆகிவிடுகிறது. சொல்லப்போனால் தத்துவமென்பதே ஒருவகையான
figurative
speech மட்டும்தான் என்று ஆகிவிடுகிறது. சொல்வதிலுள்ள சின்ன வேறுபாடுதான்.
அதை சூதன் நக்கலடிக்கிறான். அத்தனைபேருக்கும் கள்தான். ஆனால் ஆயிரம் சண்டை. அபாரமான இடம்
சரவணன்