Wednesday, August 17, 2016

மாயை



ஜெ

இன்றையவெண்முரசு சம்பந்தமில்லாத இரு பக்கன்களைக் காட்டுகிறது. நானே அவற்ரைச் சம்பந்தப்படுத்தி வாசித்தேன்

விதுரர் உலகியலில் ஆழ்ந்தவர். அவர் மீட்புக்காக ஆசைப்படுகிறார். அதிலிருந்து தப்பமுயன்றபின் முடியாமல் உலகியலுக்கே திரும்பப்போகிறார். அதை அவரே நியாயப்படுத்திக்கொள்கிறார்.

மறுபக்கம் எதிலும் ஒட்டாமல் உலகியலுக்கு அப்பால் இருக்கிறான் கிருஷ்ணன். அவனை உலகியல் படுத்தி எடுக்கிறது. அவனுக்கு மிகப்பெரிய சவாலே யாதவர்களின் உட்பூசல்தான்.  அதை அவனால் வெல்லவேமுடியவில்லை

விதுரர் பற்றே இதன் இயக்கவிசை. அன்பென்று அதை சொல்கிறோம். இரக்கமென்று பிறிதொரு தருணம் கூறுகிறோம். நெஞ்சுருகாதவன் வாழ்வதே இல்லை. என்று கண்டடைகிறார்

மறுபக்கம் கிருஷ்ணன் பற்றின் விளைவான பெரும் துன்பங்களில் சிக்கி இருந்துகொண்டிருக்கிறான்.

இந்த விளையாட்டைக் காட்டிய அத்தியாயங்கள் இவை

மகாதேவன்