அன்புள்ள ஜெ
நேற்றைய பதிவும் இன்றைய பதிவும் உச்ச கட்டமாக இருந்தது.
நேற்று
- கண்ணனை ப்ருகதர் குத்தி கிழித்த போது கண்ணண் அதை எதிர் கொண்ட விதம்
என்னை படிப்பித்தது. நான் எப்படி என் எதிராளிகளை சமாளித்து என் ஆளுமையை
நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று புரிந்தது. கண்ணனின் மூலம் அதைச்
சொன்ன உங்களுக்கு ஒரு நன்றி.
இன்று
- த்ரெளபதி பெண் மட்டும் அல்ல. பாஞ்சாலி சபதத்தின் போது அவள் பேரரசி.
அந்த சபதத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் அவளே காரணமாகின்றாள் என்று அவளை
உணர வைத்த தருணம். மறக்கவே மாட்டேன்.
இதுகாறும்
இப்படி யோசித்ததில்லை. அரசியல் ரீதியாக கெளரவர்கள் சரி என்றால் கண்ணன்
எதனால் பாண்டவர்களுக்கு உதவுகிறார் என்னும் காரணத்தை அறிய காத்திருப்பேன்.
இன்றைய பதிவால் பெண்கள் யோசித்து செயலாற்ற வேண்டியதை சுட்டியிருக்கிறீர்கள்.
நான் வெண்முரசு வாசிக்கும் போதெல்லாம் அது என் வாழ்க்கைக்கு எப்படி உதவும் என்ற நோக்கிலேயே வாசித்துச் செல்கிறேன்.
இலக்கிய நோக்கில் வெண்முரசை நான் பார்க்கவில்லை.
கண்ணன் என் குரு. வழிகாட்டி.
கண்ணனை என் கண்ணுக்கும் மனதிற்கும் அருகில் உணர வைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் நமஸ்காரங்கள்.
அன்புடன்
மாலா