ஜெ
ராமானுஜருக்கும் அவருடைய ஆசிரியருக்குமான உறவைப்பற்றி எனக்கு நிறையக் கேள்விகள் இருந்தன. என்ன இருந்தாலும் சேர்ந்து வாழ்ந்தவர்கள். அத்தகைய ஒரு பெரிய கசப்பு எப்படி வந்தது?
ஆனால் இன்று இந்தவரிகளை வாசித்தேன். தத்துவ ஆசிரியனின் மிகச்சிறந்த மாணவன் அவனை மிகக்கூர்மையாக எதிர்ப்பவனே. அந்தத் தீயூழில் இருந்து அவர்கள் தப்பவேமுடியாது. ஆச்சரியமான உண்மை, சரியான விடை.
அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு ஆசிரியராக இருந்த நாயர்சார் அடிக்கடிச் சொல்வார் ஒரு வரியை கொட்டேஷனாக ஆக்கிக்கொண்டால் அதைப்பற்றி பிற்பாடு சிந்திக்கமாட்டோம் என. அதை நினைபடுத்திக்கொண்டேன்
சிவராம்