அன்புள்ள ஜெ,
பிரயாகை மற்றும் வெண்முகில் நகரம்
இரண்டிலும் மக்கள் கொள்ளும் உணர்ச்சி நிலைப்பாடுகள் எவ்விதம்
உருவாக்கப்பட்டு வெளிப்படுத்தப் படுகின்றன என்பதிலும் கிருஷ்ணன் அதை
எவ்விதம் கையாளுகிறான் என்பதும் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆண்டாண்டு
காலமாக சிறிதும் பிழையின்றி பணி செய்த விதுரர் தன் மீது கொட்டப்பட்ட
வெறுப்பு குறித்து சிந்தித்து இறுதியில் புன்னகையைக் கண்டடைவது அற்புதம்.
பீஷ்மரின் கசந்த புன்னகையும் கிருஷ்ணனின் அனைத்தையும் கடந்த புன்னகையும்
ஒருவகையில் இவர்களின் நோக்குக்கான குறியீடு என்பேன். முழுமை நோக்கை
அடைந்தவர்கள் இறுதியில் புன்னகைக்க அல்லாமல் வேறு என்ன செய்ய இயலும். :)
சங்கரன் இ ஆர்