அன்புள்ள ஜெ
வெண்முரசு முதற்கனல்
முதல் நாகம் என்னும் தொடர்ச்சியே அத்தனை கதைகளையும் நுட்பமாக இட்டுச்செல்கிறது. நாகங்களுக்கு
இரண்டு கதைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு கதை நாகங்களின் கனவுலகம். அதுதான் ஆரம்பம் முதல்
அத்தனை கதாபாத்திரங்களிலும் வருகிறது. அது தொடங்குவது ஜனமேஜயன் யாகத்தில். இன்னொரு
நாகர்களின் வரலாறு. அது உண்மையான ஓர் ஆதிவாசி சமூகம் அழிக்கப்பட்டதன் கதை. இரண்டு கதைகளும்
ஒரே சமயம் உள்ளன. ஆதிவாசிச் சமூகம் ஒருபக்கம் அழிக்கப்பட்டு அதன் சாராம்சம் உள்வாங்கிப்பட்டு
அது இப்படி கனவாக நீடிக்கிறது என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்
மனோகரன்