அன்புள்ள ஜெ
கிருஷ்ணனின் துவாரகைபுகுதல்
வழக்கம்போல நினைக்கமுடியாத நுட்பங்களும் திருப்பங்களுமாக இருந்தது. கிருஷ்ணனுக்குப்பின்னர்
யாதவர்கள் போரிட்டு சீரழிந்தனர் என்றும் துவாரகை அழிந்தது என்றும் பாகவதம் சொல்வதை
நான் அறிந்திருந்தேன். ஆனால் அதை இப்படி ஒரு யதார்த்தமாகப் பார்ப்பதென்பது பரிதவிப்பை
ஏற்படுத்துகிறது. இப்படித்தான் இதெல்லாம் நடந்திருக்கவேண்டும். ஏனென்றால் இப்படித்தான்
இப்போதும் இவை நடக்கின்றன. ஆலமரம்போல எழுந்து நின்ற முன்னோர்களுக்குப் பிறந்தவர்கள்
அவர்களின் பிறவிச்சிறப்பை அறியாமலிருக்கிறார்கள். அந்த முன்னோர்மீது பொறாமைகொண்டு அவர்களின்
புகழை வெறுக்கிறார்கள். அந்த நிழலில் இருந்து தப்ப முயல்கிறார்கள். யாதவர்களுக்கு நிகழ்வதும்
அது மட்டுமே. கிருஷ்ணன் அனைத்தையும் அறிவான். அவன் அறிந்த அந்த இருட்டு என்ன என்று
யோசித்துப்பார்த்தேன். அது உண்மையில் லௌகீகத்துயரம் என்னும் இருட்டுதான் என நினைக்கிறேன்
ஜெயராமன்