Tuesday, June 5, 2018

அன்னை திரௌபதி




ஜெ

நகுலன் சொல்லும் ஒற்றை வரியிலேயே திரௌபதியின் மாற்றம் சொல்லப்பட்டுவிட்டது. அரசியின் இயல்பே மாறிவிட்டது. எதிர்ப்படும் அனைவரிடமும் நலம்பேசாமல் வரமுடிவதில்லை. இளையோர் என்றால் முகம் மலர்ந்துவிடுகிறது. இது ஒரு சரியான அம்மாத்தனம். என் அம்மாவிடம் இதைப்பார்த்தேன்.அம்மா சார்பதிவாளராக இருந்து ஓய்வுபெற்றார். வேலையில் இருக்கும்போது கறாராக இருப்பார். குறைவாகபேசுவார். யார் அவரை பார்த்து புன்னகைத்தாலும் என்ன வேணும் என்று கெட்பார். ஓய்வுபெற்றபின் சில மாதங்களில் உம் என்று இருந்தார். என் தங்கைக்கு பிள்ளை பிறந்ததும் மாறிவிட்டார். அதன்பிறகு இதே குணாதிசயம்தான். வழியில் கீரைவிற்பவளிடம்கூட நின்று அரைமணிநேரம் பேசிவிட்டு வருவார். பிள்ளைகளை எங்கே பார்த்தாலும் எடுத்து இடுப்பில் வைப்பார். ஆனால் மகிழ்ச்சியானவராக ஆகிவிட்டார். திரௌபதியை இப்படிப்பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது

அருண்