அன்புள்ள ஜெ
கார்கடலை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ளும்போது இது துரோணரின் கதை என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. துரோணரின் பெருந்தன்மையிலிருந்து தொடக்கம். அவர் கர்ணனை ஏற்றுக்கொள்கிறார். அவனுக்குச் செய்த அவமதிப்புகளை எல்லாம் அவர் கடந்து வருகிறார். அவர் அவனை தன்னுடன் சேர்த்துக்கொள்வதிலிருந்து தொடங்குகிரது. அவருடைய எல்லா சின்னத்தனங்களும் நாவலில் வந்தாலும் அவர் ஒரு ஆசிரியராக அமர்ந்து எல்லாரையும் ஆசீர்வதிப்பதில் நாவல் முடிகிறது அவர் செய்தவற்றிலேயே பெரிய தப்பு அபிமன்யூ கொலைதான்
டி.எஸ்,லட்சுமணப்பெருமாள்