Monday, April 8, 2019

பீஷ்மர்அன்புள்ள ஜெயமோகன் சார், 

கார்கடலின் 11ம் அத்தியாயத்தில்  பீஷ்மர்  அவருக்கு இல்லை என்றாலும் யாருக்காக போராடணும் என கிருஷ்ணர் கூறுகிறார். 10ம் அத்தியாயத்தில் காலம் முழுதும்  வெறும் பிராக்டிசிலே இருந்து கொண்டு போரை சாக்குபோக்கு சொல்லி தள்ளி போட்டுக்கொண்டே இருக்கும் பீஷ்மரை செயலாற்றுக என கூற "எதுக்கு போராடணும் அல்லது எதுக்கு போர் புரியணும் ?..ஒண்ணுலயும் மனசு ஒட்டல..இந்த உலகத்துல எதுலையும் பற்று இல்ல...என் லைப்குள்ள வந்த எல்லாத்தையும் தவறவிட்டுடேன்..போர்புரிய ஒரு ஆழமான அறைகூவல் இல்லாம சத்தியமா என்னால வில்ல தூக்கவே முடியாது என துயரில் கிருஷ்ணரிடம் கூற , கிருஷ்ணர்  பெற்றோர், உடன்பிறந்தார், மனைவி, மைந்தர், ஆசிரியர், அரசர், மூதாதையர் என நேரேழு பேர்களுக்காக போராடணும் ..அதுவும் இல்லனா ........நாம் இழந்தோர், நம்மிடம் கடன்பட்டோர், நாம் கடன்பட்டோர், நம் மீது வஞ்சம்கொண்டோர், நாம் வஞ்சம் கொண்டோர், நம் பழிகொண்டோர், குடித்தெய்வங்கள் என எதிரேழு,அனைவரிடமும் முழுவிடை பெற்றுதான் நீங்க விரும்புறமாதிரி கானேக முடியும்  என கூற  மண்டை காயும் பீஷ்மரை தான் அதை எல்லாம் காட்டுவதாக கூறி சோலைக்குள் அழைத்து  செல்கிறார். கர்ணன்  "அரசு நிர்வாகம் ,குடும்பம், தாய் தந்தை , தனது குடிகள், நண்பர்கள், என இயல் உலகிலேயே இருப்பவர் அப்படிதான் அவரால் இருக்க முடியும் ஆனாலும் அவர்  தனிமெய்மையை  தனது இயலுலகுக்கு கொண்டுசென்று குழப்பி  மண்டை காய்ந்து கொண்டிருப்பவர். அவருக்கு என்ன தேவையோ அதை கொடுத்து அனுப்பிய கிருஷ்ணர் பீஷ்மரை நன்றாய் எடைபோட்டு அவர் "அரசு, வேலை, குடும்பம், நட்பு , சமுகம், என்று எந்த உலகிலும் இல்லாமல் தேவைப்படும் போது கருவேப்பிலை போல்  யூஸ் பண்ணிவிட்டு மீண்டும் காட்டுக்கே துரத்திவிடும் சூழ்நிலையில் அவர் மனம் படும் பாட்டை பார்த்து ......இவ்வளவிற்கும் கர்ணனை போல் அல்லாமல் "பிதாமகன், மாபெரும் வில்லாளி, அஸ்தினபுரியின் முகம், சத்ரியன்," என்று  அடையாளங்களோடு மரியாதையின் உச்சத்தில் வைக்கபட்டிருப்பவர்......... அவருக்கு தேவையான அல்லது அவரது மனதை அறைகூவ அவர் புரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் என்ன என்ன ?

கிருஷ்ணர் முதலில் நான் கூறிய 14விஷயங்களும் நாக தெய்வங்கள்...எதுவும் தெய்வமாகலாம் ....மானுடரின் உச்சபட்சங்களில் எழுவதும் தெய்வம்தான்  என நீ புரிந்துகொள்ளவேண்டும், என கூற பீதியாகி "நாகங்களா ?" என கேட்க "ஆமாம்...நாகங்கள் தான்,நாம் விடைகொள்ளவேண்டியவை. எப்போதும் நம்மை ஓசையின்றி பின்தொடர்பவை, மொழியின்றி உரையாடுபவை, இமைக்காது நோக்கிக்கொண்டிருப்பவை, சுருண்டு பதுங்கும் கலையறிந்தவை, நஞ்சு கொண்டவை,வெண்ணிற நாகங்கள் விண்ணுக்குரியவை. கருநிற நாகங்கள் மண்ணுக்கு. பகலும் இரவும் என அவை ஒன்றை ஒன்று நிகர்செய்கின்றன.”  என ஆணித்தரமாக கூறி "வாழ்த்துரைக்கும் நாகத்தின் சொல் என இந்த மரத்திலிருந்து மலரோ இலையோ உதிரும். கூறுவதற்கேதுமிருந்தால் அவர்களே தோன்றவும் கூடும். தடைநிற்கும் நாகம் படமெடுத்து எழுந்து முன்வந்து நிற்கும். அத்தடையை நிகர்த்தி விடைபெற்று செலவு கொள்க!” என்கிறார். அதாவது நீ இந்த நாகங்களை சந்திக்காம பயந்து பயந்து ஓடுற நேர்கொண்டு பார் இல்லை என்றால் வாழ்வு முழுதும் துயர்தான் என்கிறார். 

முதலில் ஆதியில் இருந்து கதை தொடர்கிறது ...."இருநாகங்கள் " ...எல்லாரும் அதன் குழந்தைகள்தான் இல்லையா? தனது குழந்தைகள் தங்களுக்கான வேலையை செய்யாமல் சோர்ந்து சாக்கு போக்கு சொல்லி சுற்றி கொண்டிருந்தால் யாருக்குதான்  பிடிக்கும். உசகன் அன்னையின் அனைத்து ஆற்றலையும் திரட்டிக்கொண்டு பிறந்தவன். எவ்வளவு பெரிய கொடுப்பினை கொண்ட பிறப்பு.அவனும் அதை யூஸ் பண்ணாமல் மாமலர் வேணும் என எதுக்கோ ஆசைபட்டு ஒற்றைபடையாய் அல்லது மாயைக்குள் அகப்பட்டுக்கொண்டு பிராக்டிகலாக இல்லாமல் சாகிறான். [விடுபட்டவன் பீமன் மட்டும்தானா ?] மீண்டும் மறுபிறப்பு அடைந்து சந்தனுவாக பிறக்கிறான்.  அவர் நாக வடிவில் { பெற்றோர் ]  என் உடல்கொள்ளா பெருவிழைவு சூடி எரிந்தழிந்தவன் நான். இன்று அஸ்தினபுரியில் நிகழ்வன அனைத்தும் என் விழைவை விதையெனக் கொண்டு எழுந்தவை.”இங்கு மூச்சுலகில் காத்திருக்கிறேன். விதைத்ததை அறுவடை செய்யாமல் முழுமை அமையாது என்று. நான் காத்திருப்பது அதற்காகவே. குருஷேத்ரக் குருதிவெளியில் என் விழைவுகள் இருபால் பிரிந்து நின்று போரிட்டு குருதிசிந்தி விழுந்தழிவதை நான் பார்த்தாகவேண்டும்.” என்று கூறுகிறார். [இப்படி எப்படி ஒரு தந்தை கூறமுடியும் என்றுதான் முதலில் மனம் கேட்கிறது. கர்ணன் வஷுசேனனாக இறந்து மூச்சுலகில் தனது குருதிவழிக்காய் பரிதவிக்கிறார். ஆனால் சந்தனு தனது விதைகள் அழியவேண்டும் என்கிறார் ஏன்? ....ஒன்றின் மறுபக்கம்தான் உலகமா? இனி நமக்கு ஆப்போசிட்டாக ஒருவன் எண்ணினால், பார்த்தவுடன் வெறுத்தால், காரணம் இல்லாமல் நோண்டினால் அவன்  நமது மறுபக்கம் அந்த நாகத்தை தாண்டவேண்டுமா ? ...எப்படி ? அமைந்தமைதல், முரண்கொள்ளாதிருத்தல், வழிபடுதல் தானா? ] .ஆனால் பீஷ்மர் “நான் அதை தடுக்கவே நாளும் முயன்றேன், தந்தையே” என கூற “நீ உன் தந்தையின் மீட்பை தடைசெய்தாய். மூன்று தலைமுறைக்காலம் அதை ஒத்திவைத்தாய்” என கசந்த புன்னகையுடன் சந்தனு கூற பீஷ்மர் குளிர்கொண்டவர் என நடுங்கிக்கொண்டிருந்தார். “என்னில் எரிந்த தீ இங்கே என்னை சூழ்ந்திருக்கிறது. எரிதழலால் ஆன காட்டில் கனல்பீடத்தில் அமர்ந்திருக்கிறேன்,“கையால் தொட்டறியாத ஏழு மைந்தரால் சூழப்பட்டிருக்கிறேன். வேறெங்கோ வஞ்சம் கொண்ட மூத்தவர் தேவாபி என்னை நோக்கிக்கொண்டிருக்கிறார். மைந்தா, என்னை முற்றிலும் மறந்துவிட்ட மூத்தவர் பால்ஹிகரால் மேலும் இரக்கமின்றி தண்டிக்கப்பட்டிருக்கிறேன்.” என கூறிவிட்டு , பரவாயில்லை ,என்னுடைய பையனாக உனது கடன். ஆனால் நான் உன்னை பெருநோன்புக்கு தள்ளினேன். என் பெருவிழைவை நிகர்செய்ய நீ விழைவறுத்தவன் ஆனாய். புவியின் நெறி அது. வீரனின் மைந்தன் கோழை, அறிஞனின் மைந்தன் எளியோன், செல்வன் ஏழைக்கு தந்தையாகிறான்” என கூறி "நீண்ட வாழ்நாளை எனக்கென அளித்தாய். இனியெதையும் நான் கோரவியலாது, நீ அனைத்தையும் விட்டுச்செல்வதே இயல்பானது. உன்னை வாழ்த்துகிறேன்” என கூறும்  போது நெஞ்சம் கனத்தது. ஆனால் கடுப்பேத்துவதில் வல்லவரான பீஷ்மர் கைகளைக் கூப்பியபடி “பொறுத்தருள்க தந்தையே, நான் உங்கள்மேல் சினம் கொண்டதுண்டு. நனவிலல்ல, கனவில்” என்கிறார். ஆனால் சந்தனு கடுப்பாகாமல் “ஆம், நான் அறிவேன். இங்கே இந்தத் தழலில் குளிர்காற்றென்று வந்து தொடுவது அச்சினமே என கூற பீஷ்மர் “தந்தையே, என்ன சொல்கிறீர்கள்?” என கேட்க சந்தோஷமாய் “அப்போதுதான் நீ என் மைந்தனாக இருந்தாய்” என்கிறார் சந்தனு. “தந்தையே” என்று பீஷ்மர் கூவ புன்னகையுடன் அவர் முகம் மறைந்தது, மரத்திலிருந்து ஒரு பழுத்திலை உதிர்ந்து சுழன்றிறங்கியது.தந்தையின் கடனை முடித்துவிட்டார். அதில் இருந்து அவருக்கு விடுதலை. ஆனாலும் நான் உங்களை திட்டிய சொல் இங்கே தான் இருக்கு" என கூவ "அது உன்பாடு ...அத நீ விதைச்ச அறுத்துட்டு வா " என கூறியிருப்பார் என நினைக்கிறேன். பீஷ்மரின் முதல் கடன் .....உண்மையில் தகப்பனை தனது இயலாமையில்  திட்டாதவன் யார் ?

இரண்டாவதாய் தனது அன்னையாகிய கங்கையை சந்திக்கிறார். அவளிடம் நான் உங்கள் மகன் ,கொல்லபடாமல் எஞ்சியவன் என கூறுகிறார். ஆனால் அவள் அவரை ஏறெடுத்தும் பார்க்காமல் வெறிபிடித்தவள் போல்"நீர்பெருக்கு,“கொல்லப்படவில்லை… கொல்லப்படவில்லை” என கூற பீஷ்மர் " “எண்மருக்கும் என எஞ்சியவன் நான். எட்டு வாழ்க்கைகளை இங்கு வாழ்ந்தேன்” என்றார். “எட்டு துயர்களை, எண்மடங்கு பொறுப்புகளை, எட்டாயிரம் மடங்கு சொற்களை சுமந்தேன், அன்னையே. என் கடன் இனியில்லை.” என கூற அவள்  “பெருக்கு… பெரும்பெருக்கு…” என்கிறாள்.  எனக்கு விடுதலை கொடு என கங்கையிடம் அவர் கெஞ்ச மீண்டும் "பெருக்கு, நீர் பேருக்கு " என்றுதான் கூறி " “நான் கைவிடுவதில்லை… உண்டுவிட்டேன்… விழுங்கி மீண்டும் வயிற்றுக்குள் செலுத்தினேன் என கூறி மறைந்து விடுகிறாள்.  அன்னையின் விளைவை நிவிர்த்தி செய்யவேண்டிய கடன் இருக்கிறது. [ ஒரு பெண்ணின் விளைவை, அதுவும் ஒரு அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முடியுமா ? பூமியையே எழுதிகொடுத்தாலும்,பக்கத்துல சந்திரமண்டலம் இருக்கு அத பட்டா போட்டு என் பேர்ல எழுதிவை என்று கேட்பார்களே ? .....ஆனாலும் அவளின்  CORE DESIRE ஐ நிறைவேற்றி வைத்தால் சும்மா இருப்பாள் என நினைக்கிறேன். " அம்மா வந்தாள்" அலங்காரம் வேற இப்போ ஞாபகம் வருகிறாள் ]


மூன்றாவதாய் தனது சகோதரர்களை,பிறந்த உடன் அம்மாவால் சாகடிக்கபட்டவர்களை[மனுஷன் வாழ்க்கைதான் என்ன?] சந்திக்கிறார். அவர்கள் குழ்விகளில் கண்களில் இவ்வளவு துயர் இருக்குமா?என பீஷ்மரே ஆச்சரியப்படும் அளவுக்கு கண்களில் துயரோடு இருக்கிறார்கள். முதல் குழந்தை “எங்களை நீ அறிவாய்” என கூற “இல்லை, நான் எப்போதும் உங்களை உணர்ந்துள்ளேன், அறிந்ததில்லை” என்கிறார் பீஷ்மர். ஏழுபேரும் அவரை சூழ அவர்களிடம் "நான் உங்களுக்கு யார்?” என பீஷ்மர் கேட்க “உன் உடன்பிறந்தார் நாங்கள். நீருள் பிறந்து மண்ணைக் காணாமலேயே மறைந்தவர்கள்.”என அவர்கள் கூற பீஷ்மர் “ஆம், நான் அறிவேன்” என்றார். “நாங்கள் எண்மர், எங்களிலிருந்து பிரிந்து மண்ணில் வாழும் உன்னை இன்மையென அருகே உணர்ந்துகொண்டே இருக்கிறோம். எங்களுக்கு உன் பெயர் பிரபாசன்” என்கிறான் அனிலன். பீஷ்மர் அவர்களிடம் “உங்கள் எண்மரின் எடையையும் என் மேல் எப்போதும் உணர்ந்துகொண்டிருக்கிறேன்” என்கிறார். அனலன் புன்னகைத்து “எண்மரின் எடைகொண்ட பிறிதொருவன் அங்கிருக்கிறான்” என கிருஷ்ணரை காட்டி கூற,பீஷ்மர் திகைப்புடன் “ஆம்” என்கிறார். அப்போது பிரத்யூஷன் இடைபுகுந்து “எண்மரல்ல, எண்ணாயிரம் மைந்தரின் குருதிக்குமேல் எழுந்தவன் அவன்”  என கூற கடுப்பாகிறார். தத்துவம்னா செம காண்டாகிறார். எவ்ளோ பாத்திருப்பார்....அனைத்தும் அவரின் வாழ்வு முன் ஒன்றும் இல்லை என்றால் வெறுப்பு வருமா? வராதா ? . பீஷ்மர் அவர்களிடம் " இதுலாம் சலிப்பு...எனக்கு விடுதலை கொடுங்க " என கேட்க, மண்ணையே பார்க்காத அந்த குழந்தைகளுக்கு வாரிசுகள் தலைமுறைகள் வந்துகொண்டே இருக்க அதிர்கிறார். “எதிலிருந்து?” இங்கிருக்கும் பீஷ்மரில் இருந்தா? முன்பிருந்த பிரபாசனிலிருந்தா? வரவிருப்பவர்களிலிருந்தா? என அஹஸ் கேட்க பீஷ்மர் “இச்சுழலில் இருந்து” என்கிறார். அவர்கள் விடுதலை அளிக்கிறார்கள். 

நான்காவதாய்  அவர் கைவிட்ட அம்பையாக , வரஸ்ரீயாக , பெண்கள் பெருகி சுழன்று வருகிறார்கள். காமம். அவரின் நாகங்கள்.அவரை பின்னி பிணைந்து இருப்பவர்கள். அவர்களே அவரின் குலதெய்வங்கள். இதை விட்டு எப்படி போக முடியும் .அவர்களிடம் தன்னை பலிகொடுக்காமல் மீட்சி இருக்குமா?.தங்களை துறந்த அவரை வேட்டையாட இன்னொரு மகனை ரெடி பண்ணி வைத்து இருக்கிறார்கள்.  அங்கு இருக்கிறது பீஷ்மரின் குருஷேத்ரம். 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்