Wednesday, April 10, 2019

இருட்கனி்யை எதிர்நோக்கி



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

வெண்முரசின் இருட்கனி்யை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.  வெண்முரசின் மூன்று அல்லது நான்கு நாவல்களைக் கொண்டு ஒரு நாயகனை அல்லது முக்கிய பாத்திரத்தை (பீஷ்மர், கர்ணன், அர்ஜுனன், திரௌபதி என) மையமாகக் கொண்டு வாசி்ப்பதற்கான வாய்ப்பு குறித்து யோசித்தேன்.  மொத்தமாக வெண்முரசு எழுதி முடிக்கபட்ட பிறகு வகுத்துக்கொள்ள முடியும் என்று எண்ணுகிறேன். ஒரு வட்டத்தின் மையம் போல அனைத்து பாத்திரங்களும் மைய நிகழ்வுகளும் இடம்பெறும் நாவலைக் கொள்ளமுடியும்.  ஒரு குறுக்கு வெட்டுத்தோற்றத்தை, துவக்கப்புள்ளியில் இருந்து முதன்மை பாத்திரம் கடந்து சென்று நிற்கும் இடம் வரை. அதல்லாமல் தத்துவ, சமய, புவியியல் சார்ந்த அரசியல் பொருளாதாரம் என வேறு கோணங்களில் நாவல்களைத் தெரிவு செய்துகொள்ளமுடியும் என்று எண்ணுகிறேன்

அன்புடன்,
விக்ரம்,
கோவை