Sunday, April 14, 2019

சொல்



அன்பின் ஜெ,

//
“அந்தணன் நெறிகளை உணர்வுகளால் மதிப்பிடவேண்டியவன் என்பார் என் தந்தை.
//

இருட்கனி - 3 ஆம் அத்தியாயத்தில் சுப்ரதர் சொல்லும் வரிகள்,

பிரதோஷம் முதல் பிரதமை வரை அனைத்து நடைமுறை சிக்கல்களுக்கும் உளம்சோர்ந்து யோசனை கேக்கும் என் அம்மாவிடம் "அத பத்தி பிரச்சினை இல்லை... இப்படி பண்ணிக்கலாம் போ...." என்று ஒற்றை வரி தீர்வு ஒன்றை சொல்லி ஆற்றுப்படுத்தி அனுப்பிவைப்பார் எங்கள் ஊர் முதிய அந்தணர்.

எந்த பிரச்சினைக்கும் தீர்வை  தேடி கண்டுபிடிக்கும் அவரது செயலை அவ்வப்போது நான் பகடி செய்வதுண்டு, அவ்வாறல்ல என்று உணரவைத்த வரிகள்.



- யோகேஸ்வரன் ராமநாதன்.