Saturday, April 13, 2019

இருட்கனி



இருட்கனி நேற்று வாசித்தேன்.

பிரயாகை முடித்து இருட்கனிக்கு வந்திருக்கிறேன். உயிர் நண்பனை இழப்பது எவ்வளவு கொடுமையானது என அறிந்திருக்கிறேன். கர்ணனின் உடலை துரியோதன் பார்க்க வரும் போது அவர் உருவில் வேறு ஏதோ தெய்வம் களமெழுந்துவிட்டதோ என்ற வரி.  அந்த இடம் ஏனோ தங்கள் காலம் சென்ற நண்பர் இராதாகிருஷ்ணனை ஞாபகப்படுத்தியது. எதற்கும் கலங்காத மனம் கொண்ட மகன்கள் தாய் தந்தை இழப்புகளைவிட நண்பனின் இழப்புகளில் தங்களை மீறி அழுதுவிடுவதைக் கண்டிருக்கொறேன். அம்மா அடிக்கடி சொல்வார்கள். அப்பா எதற்கும் அழ மாட்டார். தன் நண்பர் இறந்ததுக்காக மட்டும் தான் கண்ணில் நீருடன் சட்டை கூட போடாமல் இரண்டு தெரு தள்ளி இருக்கும் அவர் வீட்டை நோக்கி ஓடினார் என ஈரமில்லாதவர்களை பற்றி பேசும் போது அம்மா சொல்வார்.

மானுடரால் விளங்கிக்கொள்ள முடியாத எவ்வுணர்வும் அச்சமூட்டுவதே.  

சில சொல்லில்லா வெளியொன்றில் அவர்கள் பேசிக்கொண்டதைப்போல. 

இன்னமும் தாங்கள் தனிமையில் தங்கள் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்களா?

பிரகாஷ் ஜி பி