Thursday, April 11, 2019

எண் நான்கு அறம்




Dear Jeyamohan,

What a  fantastic start. My day is made.

I don't know whether this story is in Vyasa's Mahabaratha or a folklore. But it appeared in Venmurasu in unexpected situation.

Also after reading this chapter, my thought revolved around few points made by Shri.Chandrashekarendra Saraswathi Swamji.

"எண் நான்கு அறம்’ என்று முன்னே சொன்ன முப்பத்திரண்டு மட்டுமில்லாமல் வேத சாஸ்திரங்களில் ஏராளமான தானங்களைச் சொல்லியிருக்கிறது. ராஷ்ட்ரகூட ராஜ்யத்தில் முக்யமான ஸ்தானத்தில் இருந்த ஹேமாத்ரி என்றவர் இந்த தானங்களையெல்லாம் தொகுத்து ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார். ”தான ஹேமாத்ரி” என்றே அதற்குப் பெயர். எழுநூறு வருஷங்களுக்கு முன் எழுதிய இந்தப் புஸ்தகத்துக்கு ஆதாரம் அதற்கும் இருநூறு வருஷங்கள் முந்தி லக்ஷ்மீதரர் எழுதிய ‘க்ருத்ய கல்பதரு’. இப்போது ‘கனோஜ்’ என்கிற கான்யகுப்ஜத்தில் வஸித்தவர் இந்த லக்ஷ்மீதரர். அதிலே சொல்லாத தானமே இல்லை. ‘வித்யா தானம்’ என்று படிப்புத் தருவது, அணைகள் கட்டி ஜனங்களுக்கு உபகாரம் பண்ணுவது முதலான ஸோஷல் ஸர்வீஸ் எல்லாவற்றையுமே அதில் தானம் பண்ணுவது என்று சொல்லியிருக்கிறது."

இந்த்ரிய மனோ நிக்ரஹம் பண்ணினவர்களாகவும், க்ரூர ஸ்வபாவம் துளிக்கூட இல்லாமலும்கூட மனிதர்கள் தங்களை உயர்த்திக்கொண்டு விடலாம். ஆனால் இப்படிப்பட்டவர்கள்கூடப் பொருளை எடுத்துக் கொடுப்பது, தானம் செய்வது என்றால் கொஞ்சம் பின்னேதான் நிற்கிறார்கள். பொருளில் பற்றை விடுவது தான் மநுஷ்யனுக்கு மஹா கஷ்டமாக இருக்கிறது. இதனால்தான் மனிதனுக்கு முக்யமாக ” தத்த – தானம் பண்ணு ” என்று வேதத்தின் முடிவில் இருக்கப்பட்ட உபநிஷத்தே உபதேசம் பண்ணுகிறது

நம்மில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்த்ரத்தை உபதேசம் வாங்கிக் கொள்கிறோம். சிலர் (சிவ) பஞ்சாக்ஷரீ எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் (நாராயண) அஷ்டாக்ஷரீ எடுத்துக் கொள்கிறார்கள். இப்படியே (முருகனுக்கான) ஷடக்ஷரீ, ராம மந்த்ரம், க்ருஷ்ண மந்த்ரம், அம்பாள் மந்த்ரங்கள் என்று பல இருக்கின்றன. இவற்றை அவரவர் தங்கள் இஷ்டப்படி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் நம் அத்தனை பேருக்கும், மநுஷ்ய ஜன்மா எடுத்த ஸகலருக்கும், வேத சிரஸான உபநிஷத்திலேயே உபதேசித்துள்ள மந்த்ரம் ” தத்த : – தானம் பண்ணு; நல்ல கொடையாளியாக இரு”என்பதுதான்


இதேமாதிரி க்ருஷ்ண யஜுஸில் உள்ள தைத்திரீயோபநிஷத்திலும் (1.11.3) தானத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறது.அது என்ன சொல்கிறது? ”சிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும். அசிரத்தையோடு கொடுக்கக் கூடாது” என்கிறது. ஸ்ரீயை (அதாவது செல்வத்தை) க் கொடுக்கும்போதே மனஸை ஸ்ரீயாக (லக்ஷ்மீகரமாக, மங்களமாக, ஸந்தோஷமாக) வைத்துக்கொண்டு கொடுக்க வேண்டும் என்கிறது. முகத்தைச் சுளிக்காமல் கொடுக்க வேண்டும். ஸ்ரீயின் நிறைவுதான் ‘ச்ரேயஸ்’ என்பது. மனஸில் ஸ்ரீயுடன், மனமலர்ச்சியுடன், கொடுத்தால் இந்த தானத்தின் பலனாக ‘ச்ரேயஸ்’ கிடைக்கிறது. இன்னம் ஜாஸ்தி கொடுப்பதற்கு நம்மால் முடியவில்லையே என்று வெட்கத்தோடு கொடுக்க வேண்டும். ஹ்ரீயுடன் கொடு என்கிறது உபநிஷத். ‘ஹ்ரீ’ என்றால் வெட்கம், லஜ்ஜை என்று அர்த்தம். புருஷ ஸூக்தத்தில் பகவானுக்கு ஹரீ , ஸ்ரீ (லக்ஷ்மி) என்று இரண்டு பத்னிகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது. இங்கேயும் லக்ஷ்மியை, அதாவது பொருளைத் தரும்போது, ”ஸ்ரீயோடு கொடு”, ”ஹ்ரீயோடு கொடு” என்று சொல்லியிருக்கிறது. வெட்கம் இரண்டு காரணத்துக்காக. ஒன்று, இன்னும் ஜாஸ்தி தரமுடியவில்லையே என்று; இரண்டாவது, தானம் பண்ணுவது வெளியிலேயே தெரியக்கூடாது என்ற கெனரவமான கூச்சம். 

தானம் பண்ணிவிட்டு நாம் நம் பெயரைப் பேப்பரில் போட்டுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும், ‘எப்படியாவது நாலு பேருக்கு நாம் தானம் பண்ணினதை நைஸாகத் தெரியப்படுத்த வேண்டும்’ என்கிற எண்ணம் உள்ளூர இருந்தால் அதுவும் தோஷம்தான். அந்த நாலுபேர் நாம் தானம் பண்ணினதற்காக ஒரு பங்கு கொண்டாடினால், அதோடு, ”பண்ணின தானத்தை வெளியிலேயே தெரிவிக்காமல் எத்தனை உத்தமமான குணம்!” என்று பத்து பங்கு ஸ்தோத்திரம் பண்ணுவார்கள். மனஸுக்குள் நாம் இந்த ஸ்தோத்திரத்துக்கு ஆசைப்பட்டுவிட்டால், பேப்பரில் போட்டுக் கொள்வதைவிட இதுவே பெரிய தோஷமாகிவிடும். ஆனாலும் இப்படியெல்லாம் ஆசை, கீசை தலைதூக்கிக்கொண்டுதானே இருக்கிறது? அது தலையைத் தூக்கவொட்டாமல் அழுத்தி வைக்க என்ன பண்ணலாம்? ஒன்று பண்ணலாம் என்று தோன்றுகிறது. அதாவது, ‘தானம் வாங்குகிறவன் நமக்கு அந்நியன் இல்லை; நம்மவனேதான்’ என்ற உணர்ச்சியை நன்றாக வளர்த்துக்கொண்டுவிட்டால் கொடுத்ததை வெளியில் சொல்லவே தோன்றாது. நம் குழந்தைக்கு அல்லது நெருங்கிய பந்துக்களுக்கு நாம் ஏதாவது செய்தால் அதை வெளியில் விளம்பரம் செய்து கொள்வோமா?

 பியா தேயம் ” என்கிறது உபநிஷதம். ”பியா” என்றால், ‘பயந்துகொண்டு’ என்று அர்த்தம். ஸாதாரணமாக, வாங்குகிறவன்தான் பயந்து கொண்டு நிற்பான்;கொடுக்கிறவன் அதட்டிக்கொண்டு கொடுப்பான். வாஸ்தவத்தில் கொடுக்கிறவன்தான் பயப்பட வேண்டும் என்கிறது உபநிஷத். கடைசியாக, ‘ஞானத்தோடு’ கொடுக்க வேண்டும் என்று முடிக்கிறது. ‘ஸம்வித்துடன் என்று சொல்கிறது. ‘ஸம்வித்’ என்றால் ‘நிறைந்த ஞானம்’ கொடுக்கிறவன், வாங்கிக் கொள்கிறவன் இரண்டு பேர்வழிகளும் வாஸ்தவத்தில் ஒருவனேதான் என்ற அறிவுதான் அந்த ‘ஸம்வித்’.



Thanks

Raghav 
In this appraisal period (in office) the following made more sense to me.
“நீ மானுடரை அவர்களின் தகுதியால் மதிப்பிட்டாய். அவர்கள் தங்களை தங்கள் விழைவால் மதிப்பிட்டுக் கொள்கிறார்கள்”