Thursday, June 7, 2018

சூழ்ச்சியும் உணர்ச்சியும்



ஜெ

சபையில் யுதிஷ்டிரர் மிகமிக இயல்பான உணர்ச்சியுடன் பேசினாலும் உண்மையில் அவர் அப்படிப் பேசவில்லை. அது மிகத்தந்திரமான உரை. பழங்குடிகள் அந்த உரைகேட்டு எழுந்து ஆவேசம் அடைந்திருந்தால் பாஞ்சாலியின் சபதம் என்னாயிற்று என்ற கேள்வியே இல்லாமல் போர் ஆரம்பித்திருக்கும். அவருடைய தந்திரமும் நுட்பமும் அவர்களிடம் செல்லுபடியாகவில்லை. அவர்கள் அப்பட்டமானவர்கள். நேரடியாகக் கேட்டுவிடுகிறார்கள். அவர்களின் உணர்ச்சிகளும் நேரடியானவை. அவற்றை அவரால் எதிர்கொள்ளமுடியவில்லை

அதோடு அவர்களால் பழங்குடிகளின் மனநிலையையே புரிந்துகொள்ள முடியவில்லை. சௌனகர் அவர்கள் ஏதோ சூழ்ச்சி செய்கிறார்கள் என்றுதான் நினைக்கிறார். அதிலுள்ள உண்மையான உணர்ச்சிநிலைகளே அவர்களுக்குப் புரிந்துகொள்ளக்கூடியதாக இல்லை. தங்கள் வழக்கப்படி அவர்கள் அதற்கு எதிராகச் சூழ்ச்சிதான் செய்ய நினைக்கிறார்கள். சகதேவன் மட்டுமே அவர்களைக் கொஞ்சம் புரிந்துகொண்டிருக்கிறான்.

வெண்முரசில் ஆரம்பம் முதலே இந்த முரண்பாடு இருந்துகொண்டே இருந்தது. இது இந்தியாவின் முக்கியமான முரண்பாடு என நினைக்கிறேன்

மகேஷ்