பெருங்காற்றுகள் நுண்வடிவில் உறையும் விரிவானுக்குக்கீழே எந்த நம்பிக்கையில் கூடுகட்டுகின்றன பறவைகள்? அறியேன்
3 நாட்களாக நடந்த நாடக கொண்டாட்டங்கள் எல்லாம் சட்டென முடிந்து போனது போல் மனம் பாரமானது இதை படித்த்தும்
மிக அருமையான நாடகமாக இதை நிஜமாகவே மேடையில் நடத்தலாம். எல்லாம் எல்லாம் ஜெ அவர்களே சொல்லி கொடுத்து விட்டார்கள். அரங்க அமைப்பு, அரங்கு சொல்லி கதாபாத்திரங்களுடன் பேசுவது போன்ற வித்தியாசமான, கூடவே நகைசுவையான ஒரு படைப்பு. அரங்கு சொல்லிக்கு இப்போது ரசிகர்கள் இருக்கிறர்கள். அத்தனை அருமையான ஆளுமை அந்த கதாபாத்திரம்
எத்தனை எளிமையாக ஒரு மிகப் பெரும் விஷயத்தை நாடக வடிவில் சொல்லி இருக்கிறார்...
காண்டீபத்தின் இன்னொரு பெயர் தான் சந்திர தனுஷா? குரங்கு கொடி ஏன் பார்த்தன் வைத்து இருக்கிறான் என்றும் இன்று தான் புரிந்தது. இதர்கு முன்பே மணிபூரகத்திலோ அல்லது உலூபியிடமோ தான்பற்றற்றவன் எல்லாபிணைப்புகளயும் அருத்துக்கொ|ண்டேதான் போய்க்கொண்டு இருப்பேன் என்று அர்ஜுன் சொல்கையில் யாரோ அவனிடம் மரங்கள் வேருடன் தான் பிணைக்கபட்டிருக்கிண்றன . எளிதல்ல எல்லா பிணைப்புகளயும் அறுத்துச் செல்வது என்று சொல்வார்கள்.
இந்த்திரபிரஸ்தம் விழாவே வந்து விட்டதே ஏன் இன்னும் காண்டவ தகனம் சொல்லப்படவில்லை , எப்படி அதை சொல்லப்போகிறார் என்ரு காத்திருந்தோம். இப்படி நாடக வடிவில் சொல்லியது மிக மிக புதுமை மிக மிக அருமை
அன்புடன்
லோகமாதேவி